நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹி புயல் காரணமாக அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தொடர் மழையால் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளது. பலத்த சூறாவளிக் காற்றால், பல பகுதிகளில் கட்டிடங்கள் மின்கம்பங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ள நியூசிலாந்து அரசு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.