உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவை வழங்குமாறு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
பொதுநிருவாக அமைச்சின் 32/2017 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி இரண்டாம் நிலை மட்டமாக கணிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர், கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் இணைந்த அலுவலர், இலங்கை ஆசிரியர் சேவை, தாதிச் சேவை உள்ளிட்டோர் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அல்லாதவர்கள் என தாபன பணிப்பாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதையடுத்து இவ்வாறானவர்களுக்கு சம்பமற்ற லீவினை வழங்குமாறு விசேட சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய 01.06.2007 ஆம் ஆண்டு 18940 ரூபா அடிப்படைச் சம்பளமாக கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க முடியாது என அறிவிக்கப்பட்டதற்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலுக்கான சம்பளமறற லீவு மறுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சம்பளமற்ற லீவை வழங்குமாறும் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.