ஜனாதிபதி ஊடகங்களிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டார்.
இந்த நாடு கடந்த ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை 10 டிரில்லியன் ரூபாய்கள் அதாவது 10,000 பில்லியன் ரூபாய்கள் கடன் பெற்றிருக்கிறதாம்.
ஒரு பில்லியன் 100 கோடி ரூபாய்கள் என்றால் 10 இலட்சம் கோடிகள்.
இந்த 10 இலட்சம் கோடியில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கான கணக்கு வழக்குகளே இருக்கின்றனவாம். (1000 பில்லியன் )
அடுத்த ஒன்பது டிரில்லியன்களுக்கு அதாவது ஒன்பது இலட்சம் கோடி ரூபாய்களுக்கு அபிவிருத்திகளாகவோ சொத்துக்களாகவோ செலவினங்களாகவோ கணக்கு வழக்குகள் இல்லையாம்.
அதாவது 66.66 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கே கணக்கு வழக்குகள் இருக்கின்றனவாம்.
அல்லாஹ்ட காவல்….
நல்லாட்சி பதவியேற்று மூன்று வருடங்களாகியும் இன்னும் பொதுக் கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.
சமூகத்தை மட்டுமல்ல இந்த தேசத்தையும் திருடர்களிடமிருந்து மீட்கும் அறப்பணியில் பங்காளர் ஆகுங்கள்.
மட்டரகமான போட்டிக் குழுக்களின் சூதாட்ட சாக்கடை அரசியலில் இருந்து சமூகத்தை மீட்டு ஆக்கபூர்வமான அறிவு பூர்வமான அரசியலை நோக்கி புதிய தலைமுறை இளம் தலைமைகள் புரட்சிகரமாக நகர்த்த வேண்டும்.