ஹைதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மாநகருக்கு உட்பட்ட பாராத்நகர் ரயில் நிலையம் அருகே, இளைஞர் ஒருவர், தண்டவளாத்தில் வரும் ரயில் முன் நின்று செல்பி எடுக்க திட்டமிட்டுள்ளார்.இதற்காக தண்டவாள ஓரமாக நின்று ரயில் வரும் போது செல்பி எடுக்க தனது செல்போனுடன் அவர் தயாராக நின்று கொண்டிருந்தார். ரயில் வேகமாக வந்த போது, அருகே இருந்தவர், எச்சரித்தும, அந்த இளைஞர் அதை கண்டுகொள்ளமால் செல்பி பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த ரயில், அந்த இளைஞர் மீது மோதியது.ஆபத்தை உணராமல், தண்டவாளத்தின் அருகே நின்று செல்பி எடுத்த அந்த இளைஞர், தலையில் படுகாயங்களுடன், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். நிகழ்விடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினரின் விசாரணையில், அந்த இளைஞர் பெயர் சிவா என்றும், அதே பாரத்நகர் ரயில் நிலையம் அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரின் செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.