முல்லைத்தீவு – செம்மலை, நாயாற்று கடற்பகுதியில் இன்றைய தினம் திடீர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் காலநிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்றுமே இல்லாதவாறு கடல் மிக குளிர்ச்சியுடன் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தநிலை தொடர்ந்தால் அப்பகுதிக்கு மீன்கள் வருவது குறைவடையும் என மீனவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தமது வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.