இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் 121-வது பிறந்தநாள் இன்று. இறந்து பல பத்தாண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குமூலம் ஒரு வீடியோவைத் தரவேற்றி, பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.
The valour of Netaji Subhas Chandra Bose makes every Indian proud. We bow to this great personality on his Jayanti. pic.twitter.com/Qrao1dnmQZ
அதில், `சுபாஷ் சந்திர போஸின் வீரம், அனைத்து இந்தியர்களையும் பெருமையடையச்செய்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று, அந்த மாபெரும் ஆளுமையின் முன்னாள் தலைவணங்குகிறோம். மக்களின் எண்ணங்களுக்காக அயராது உழைத்த மிகத் தைரியமான தலைவராக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.