நடிகர் சல்மான் கானின் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்களில் ருமேனியாவை சேர்ந்த லூலியா வந்துரும் ஒருவர். இருவரும் காதலிப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய இசை ஆல்பம் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் லூலியா. அப்போது அவரிடத்தில் சல்மான் உடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த லூலியா, ரசிகர்கள் நான் இணைந்து படம் பண்ணுவதை எப்போது வெள்ளித்திரையில் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. அதை காலம் தான் முடிவு செய்யும் என்றார்.