ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது.
ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 1,460 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 7 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதையடுத்து கோலி மூன்று விதமாக கிரிக்கெட் போட்டிக்கும் தலைமை தாங்கி அணியை வழிநடத்தி வருகிறார்.
ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.