குஜராத்- மகாராஷ்டிரா கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் தீக்காயமடைந்தனர். 26 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர்.
குஜராத்- மகாராஷ்டிரா கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று 30 ஆயிரம் டன் டீசலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் தீன்தயாள் கண்டலா துறை முகம் நோக்கி வந்த போது 15 கடல்மைல் தொலைவில் நேற்று மாலை 6 மணியளவில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கடலோர காவல் படையினர் படகில் பயணித்த 26 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் 2 பேருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது.