பெண்கள் மதுபான நிலையங்களில் வேலை செய்வதற்கும் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும் அனுமதி வழங்கி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை நீக்கியதனால் தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி நடிகை சமணலி பொன்சேகா உள்ளிட்ட 11 பெண்கள் நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு சமர்ப்பித்துள்ளனர்.
நிஷாந்தி பண்டாரநாயக்க, எம்.டீ.ஜே.பி.பெர்னாண்டோ, சமணலி பொன்சேகா, சந்திமா ரவினி ஜினதாச, தீபாஞ்சலி அபேவர்தன, சப்ரினா ஏசுபுலி, ஷாரண்ய சேகரம், ரந்துலா த சில்வா, மேனகா கல்கமுவ, சுஜானா கமகே, விஷாகா பெரேரா திலகரத்ன ஆகியோர் மூலம் குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தில் 12 (1) மற்றும் 14(1) ஜீ ஆகிய சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்தின் மூலம் சமவுரிமை சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் அதன்படி பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.