புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை குறித்த இளைஞன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று இரவு புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.