இந்திய சீன எல்லைபகுதியான அருணாசலில் சீன ராணுவ வீரர் 1 கி.மீ. தொலைவிற்கு இந்திய எல்லைக்குள் நுழைந்து சாலை பணிமேற்கொண்டதை நமது ஜவான்கள் தடுத்து விரட்டியடித்தனர்
கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய சீன எல்லையான சீனா- பூட்டான்- சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு போர் பதட்டம் வரை சென்றது. 73 நாட்களுக்கு பின் சகஜநிலை திரும்பியது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தோ- திபெத் படைவீரர்கள் அருணாசல் பிரதேசத்தின் சியாங்க் மாவட்டத்தின் எல்லை பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 1 கி.மீ.தொலைவிற்கு இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தைச் சேர்ந்தவர் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்து சாலை பணிகளை மேற்கொண்டிருந்தார். இதை கண்டறிந்த இந்தோ திபெத் வீரர்கள் அந்த வீரரை அங்கிருந்து அப்புறப்படுத்தி எச்சரித்து விரட்டியடித்தனர்.