குளிர் காலநிலை கனடாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது. இக்காலநிலையானது பகல் வேளைகளில் -10 டிகிரி செல்சியஸ் வரை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரொறன்ரோ குடியிருப்பாளர்கள் புத்தாண்டு வார இறுதிவரை இக்காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகின்றது.
அதேவளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அதியுச்ச குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.