ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவில் மாற்றமில்லை- மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பார்லி. குளிர்கால கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் கேட்கப்பட்ட ரு கேள்விக்கு பதிலத்து பேசியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் 30 வரை ரூ.51,890 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் விமானங்கள் வாங்குவதற்காக பெறப்பட்ட கடன் ரூ.18,364 கோடி. முக்கிய செயல்பாடுகளுக்காக பெறப்பட்டவை ரூ. 33.526 கோடி 2016-17ம் ஆண்டில் விமான போக்குவரத்தின் மூலம் ரூ.215 கோடி லாபம் கிடைத்தாலும், ரூ.3,643 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. நஷ்டத்தினை சரிகட்டும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.