இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது, அவற்றை முகாமை செய்வதற்கான தொழில்நுட்ப அறிவினை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஜப்பானிய காணி, கட்டுமான, போக்குவரத்து அமைச்சர் கீச்சி இசீ இலங்கை வந்திருத்த போது, விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அனர்த்த முகாமைத்து ஒத்துழைப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.