சமீபகாலமாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற பைரஸி இணைய தளங்கள், தமிழ்ப்படங்கள் வெளியாகும் அன்றே புதுப்படங்களை வெளியிட்டு படங்களின் வசூலுக்கு வேட்டு வைத்து வருகின்றனர். இந்த இணையதளங்களை முடக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் ஒர்க்-அவுட்டாகவில்லை. அதனால் சவால் விட்டபடியே ஒவ்வொரு படத்தையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக, தற்போது தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் இணையதளங்களைப் பார்த்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கெஞ்சத் தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், ஜெய் – அஞ்சலி நடித்துள்ள பலூன் படத்தை இயக்கியுள்ள சினீஷ், “பாஸ் உங்களை தடுக்க முடியாதுன்னு தெரியும். தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. பலூன் படத்திற்கு ஒரு வாரம் டைம் கொடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என்று தனது டுவிட்டரில் கெஞ்சிக்கேட்டுக் கொண்டுள்ளார்.