சிரஞ்சீவி நடித்து வரும் 151வது படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவின் சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதில் சில முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அந்த காட்சிகளில் 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் சிரஞ்சீவி மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப் ஆகிய முக்கிய நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.