உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி, அரச அச்சக திணைக்களத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச அச்சகத்தில் தனியான பாதுகாப்பான ஒரு பிரிவு இந்த அச்சுப் பணியை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முதலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட 93 உள்ளுராட்சி சபைகளின் வாக்குச் சீட்டுக்கள் முதலில் அச்சிடப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பகுதிக்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சிய 248 சபைகளுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.