தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கைதான மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.