தற்போது அறிமுக இயக்குனரான சரத் சந்தித் டைரக்சனில் ‘பரோல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார். மம்முட்டியின் மனைவியாக இனியா நடிக்க, தங்கையாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டதே சுவாரஸ்யமான நிகழ்வு தான். நீண்ட நாட்களாக டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பு நடைபெற்றுவந்தபோது, அதுகுறித்து மம்முட்டியிடம் ஞாபகப்படுத்தினாராம் இயக்குனர். இந்தப்படத்தின் பாடல்களில் ஒன்று பரோல் சம்பந்தப்பட்ட பாடலாக உருவாகி இருந்ததாம்.
மம்முட்டி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உதவி இயக்குனரிடம் இருந்து கிளாப் போர்டை வாங்கி, அதில் ‘பரோல்’ என டைட்டிலை எழுதினாராம். அவ்வளவுதான்.. மம்முட்டி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் உண்டா என்ன.? இப்போது அதையே டைட்டிலாக்கிவிட்டனர்.