துப்பாக்கி மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக ஃபேஸ்புக்கில் ரகசியக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக சிகாகோ போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிகாகோ காவல்துறை கண்காணிப்பாளர் எட்டி ஜான்சன் கடத்தலுக்காக ஃபேஸ்புக்கில் ரகசியக் குழுவாக செயல்பட்டு வந்ததாக 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தார். இதுதொடர்பான கடந்த 10 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் தன் தொழில் நுட்பத் துறைகளைக் கொண்டு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் பல ரகசிய ஃபேஸ்புக் குழுக்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை புரியும் வகையில் ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.: