வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள் அதன் உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேத்தே ஸ்டீபன்ஸ் என்ற 22 வயது பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஸ்டீபன்ஸ் கடந்த வாரம் தனது இரண்டு வளர்ப்பு நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்ட போது அவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரின் உடலில் விலங்கு கடித்து குதறியிருந்தன.
உடலை சோதனை செய்த மருத்துவர்கள் அது நாய் கடித்த தடயம் என கூறினர். அதுவும் அவர் வளர்த்த நாய் தான் கடித்தது என்பது கண்டறியப்பட்டது. அடையாளம் காணமுடியாத படி அவர் உடல் கடித்து குதறப்பட்டிருந்தது.
சிறு வயதிலிருந்து வளர்த்த சொந்த நாய்களே தனது உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.