ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது வீடியோ வெளியீடு விவகாரத்தில் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக பல முறை புகார் அளித்துள்ளது. வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் ரூ. 6 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக ஆதாரத்துடன் திமுக புகார் அளித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டிருக்கும் காட்சிகளை பார்த்தேன். இதைத் தான் அப்போதே திமுக தலைவர் கருணாநிதியும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ, புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரி இருந்தார். அப்போதே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்பது தான் என்னுடைய கருத்து. ஜெயலலிதா மரணம் பொறுத்தவரை அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது வீடியோ வெளியீடு விவகாரத்தில் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இந்த வீடியோவால் இடைத்தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.