ஜெர்மனி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 1,500 விமானங்களில் 174 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லின், ஹாம்பர்க், மியூனிச், வியன்னா, டப்ளின் மற்றும் வார்சா ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஆயிரக்கனக்கான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.பனிப்பொழிவு காரணமாக விமானத்தின் டயர்கள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஓடுபாதையையும், விமானத்தின் மீது படர்ந்திருக்கும் பனியையும் அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பனிப்பொழிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.