சமீபத்தில் வெளியான படங்களில் பல தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ள படம் அருவி. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இன்று மிகப்பெரிய பரபரப்பை பெற்றிருக்கிறது.
தயாரிப்பாளரே நினைத்துப்பாரக்காத அளவுக்கு மிகப்பெரிய மவுத் டாக்கை உருவாக்கியுள்ளது அருவி. படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘அருவி’யை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, அருவி படத்தில் குறிப்பிட்ட ஒரு நடிகரின் படம் குறித்த காமெடிக்கு அந்த நடிகரின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், அருவி படத்தில் இடம்பெறும் டிவி ரியாலிட்டி ஷோ காட்சிகளும் சர்ச்சையாகியுள்ளது. அந்த ஷோவின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்னன் ‘அருவி’ குறித்து வருத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ‘அருவி’ படத்தைத் தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ”அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!” என டுவீட் செய்து வருத்தம் தெரிவித்துள்ளார்.