நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் சில இடங்களில் குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் – 75 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வடக்கு, தெற்கு மாகாணங்களில் ஓரளவு காற்று வீசும் எனவும் மேற்கு, வடமேல், மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.