“இன்று கண்விழித்தவுடன் நீங்கள் முதலில் பார்த்த காட்சி நிஜமானது தானா?” இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியது உண்டா?
“இல்லையே!” என்று பதிலளிக்கும் முன், இந்தச் சந்தேகம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தோன்றினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் காண்பது நிஜமா அல்லது உங்களின் அதீத கற்பனையா என்று தெரியாமல் உங்களால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. இப்படிப் பட்ட மனநிலைகளில் இருப்பவர்களுக்கு, வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிப் போய்விடுகிறது.
காட்சிகளைக் கூட விட்டு விடுங்கள். ஏதேனும் செய்து, குழப்பி எடுத்து, இது நிஜம் இது பொய் என்று நம் மன அலமாரியில் அடுக்கிக் கொள்ளலாம். வினோத சப்தங்கள், காதின் அருகில் கிசுகிசுக்கப்படும் வசவுச் சொற்கள், தூரத்து அறையில் இருந்து வந்து பார்க்க சொல்லி அடம்பிடிக்கும் ஒரு குழந்தையின் குரல், இதெல்லாம் கூட பலருக்கு நடப்பதுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.
இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு வந்திருக்கும் பிரச்னையின் பெயர் “மனச்சிதைவு நோய்”,