டிசம்பர் என்றாலே பேரழிவுகளின் மாதமாக பீதியை கிளப்பி வருகிறது. இந்தநிலையில், வரும் 16ம் தேதி வான் வெளியில் விண்கல் ஒன்று பூமியை நெருங்கி செல்ல உள்ளதாம்.
சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த விண்கல், பூமியிலிருந்து சுமார் 6.4 மில்லியன் மைல் (விண்வெளியில் இது அருகாமை தொலைவு) தொலைவில் சூரியனுக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளதாம். சூரியனை நெருங்கி செல்வதால், இந்த விண்கல்லுக்கு கிரேக்கர்களின் சூரிய கடவுளின் மகனான ‘பெஹேதன் 3200’ என பெயரிடப்பட்டுள்ளது.