தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளட் அமைப்பு எதிர் வரும் உளளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோருவதாக அதன் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே இன்றைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் புளட்சார்பில் குறித்த விடயம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் புளட் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டங்கள் தொடர்பில் ஓர் இணக்கத்திற்கு வந்துள்ளோம். இருப்பினும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்பில் மட்டுமே இன்னும் பேச வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் பங்காளாக் கட்சிகளில் ஒன்றான ரெலோ ஓர் தீர்வு வந்துள்ளதாக அறிகின்றோம். இருப்பினும் அது தொடர்பில் முழுமையான விபரம் கிடைக்க வில்லை.
இருப்பினும் புளட் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகள் உள்ளிட்ட இடங்களையும் கிளிநொச்சியில் ஒரு சபையினையும் கோருகின்றோம். இதில் அதிகமாக மானிப்பாய் , சங்கானை , வலி. தெற்கு போன்ற சபைகளை கோருகின்றோம். இருப்பினும் கட்சிகளின் நிலமைக கேற்ப சபைகள் மாறுபடினும் எண்ணிக்கையை கருத்தில் கொள்கின்றோம். என்றார்.