பிரான்ஸ் -சம்பினி அருகிலுள்ள Joinville-le-Pont (Val-de-Marne) நகரில் 6 மற்றும் 10 வயதுடைய தனது இருமகள்களையும், அவரின் தாயார் கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு தங்ககத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இவர்களைக் கீழே தூக்கியெறிந்த இந்தப் பெண்மணி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியiயும் பிள்ளைகளையும் காணவில்லை என்று Levallois-Perret (Hauts-de-Seine) நேற்று, இந்தப் பிள்ளைகளின் தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் Joinville-le-Pont இல் வைத்து இந்தப் பெண்ணின் சிற்றுந்தைக் கண்ட காவற்துறையினர் உடனடியாகப் பின்தொடர்ந்து சென்றதில், அவர்களைக் கண்ட பெண்மணி, உடனடியாக தங்கியிருந்த விடுதிக்குள் சென்று மூன்றாவது மாடியில் உள்ள சேவை அறையின் மேல் ஏறி, இரண்டு பிள்ளைகளையும் வெளியே தூக்கி எறிந்துள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்ய முயன்றபோது காவற்துறையினர் அவரைத் தடுத்துக் கைது செய்துள்ளனர்.
படுகாயமடைந்த பிள்ளைகளின் ஒருவர் நிலை மிகவும் ஆபத்தில் உள்ளது. இருவரும் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.