பரேலி கி பார்பி படத்தை தொடர்ந்து ஜங்கிள் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ஹாய் ஹோ படத்தில் நடிக்கிறார் ஆயுஸ்மான் குராணா. இந்தப்படம் ஒரு காமெடி படமாக உருவாக உள்ளது. ஒரு குடும்பத்தில் நிகழும் பிரச்னையை காமெடி பிளஸ் குடும்ப சென்ட்டிமென்ட் கலந்து உருவாக உள்ளது. அமித் சர்மா இயக்குகிறார். ஆயுஸ்மான் ஜோடியாக சான்யா மல்கோத்ரா நடிக்கிறார். அடுத்தாண்டு ஜனவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.