ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 உருவாகி வருகிறது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார். ரெமோ டிசோசா இயக்க, ரமேஷ் தருணி தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார் சல்மான். இதற்காக தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சல்மான், ஜாக்குலின் உடன் பாபி தியோல் டெய்சி ஷா போன்றவர்களும் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அடுத்தாண்டு ரம்ஜான் தினத்தில் படம் வெளியாக உள்ளது.