புகைப்படக்கலைஞர் ஒருவரை மற்றும் வெவ்வேறு ஊடகவியலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த Abdelhakim Dekhar என்பவருக்கு, நேற்று 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த 2013 நவம்பர் மாதத்தில் Liberation பத்திரிகையின் புகைப்படக்கலைஞரை மிக மோசமாக தாக்கிய வழக்கில் Abdelhakim Dekhar கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக BFMTV தொலைக்காட்சி நிருபர் ஒருவரை அச்சுறுத்தியிருந்ததாகவும், la Defense இல் உள்ள Société Générale வளாகத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வழக்கறிஞர் தெரிவிக்கும் போது, ‘Abdelhakim Dekhar க்கு கொலை செய்யும் நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை.’ என தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் விசாரணைகளின் போதும் அவர் அச்சுறுத்துவதற்காகவே இது போல் நடந்துகொண்டதாகவும், அவர்களை கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
52 வயதுடைய Abdelhakim Dekhar, முன்னதாக 1998 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.