கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் சேதமடைந்த சொத்துக்களை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (18) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரதேசத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் அமைதியாக செயற்படுமாறும் காலி வாழ் மக்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.