பொகவந்தலாவ தொடர் வீட்டு பகுதியிலிருந்து கை வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது .
சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா வயது 63 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் காணப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு சடலம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை நேரில் வருகைதந்து மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டிய மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்