தலைநகர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது.
உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யமான ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டல் கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 17ம் திகதி ஷங்ரீலா ஹோட்டல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
Shangri La ஹோட்டல் வலையமைப்பின் மற்றுமொரு ஹோட்டல், கடந்த வருடம் ஜனவரி மாதம் ஹம்பாந்தோட்டையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் இரண்டாவது மிகவும் பிரமாண்டமான ஹோட்டல் கொழும்பில் திறக்கப்படவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஹோட்டல் Shangri La நிறுவனத்தின் 101வது ஹோட்டலாகும்.
இந்த ஹோட்டலுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் மூன்று கட்டங்களில் முன்னெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றே திறக்கப்படவுள்ளது.
32 மாடியும் 540 அறைகளும் கொண்ட இந்த ஹோட்டலில் 750 ஊழியர் பணியாற்றுகின்றனர்.
இரண்டாவது கட்டமான வீட்டுத்தொகுதி விரைவில் பூர்த்தி செய்யப்பட்ட திறந்து வைக்கப்படவுள்ளது.
2019ம் ஆண்டளவில் வீட்டுத்தொகுதி திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.