ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குண்டு வைத்து எண்ணெய்த் தொட்டியை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் மூத்த அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தான், பர்வான் மாகாணத்திலுள்ள எண்ணெய்த் தொட்டியை புதன்கிழமையன்று தீவிரவாதிகள் குண்டு வைத்து வெடிக்கச் செய்தனர். இதில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, புதன்கிழமையன்று ஆப்கான் தலைநகரம் காபூலில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.