மயில்த் தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பல்வேறு குறைபாடுகளை சுற்றிக் காட்டி இன்று (02) காலை 9.00 மணிக்கு பிரதேச சபைச் செயலாளரிடம் மயில்த் தீவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வீ.எம்.ராசீக் பரீது அவர்களினால் நான்கு மகஜர் வழங்கப்பட்டது
இம்மகஜர் ஒவ்வொன்றும் இப்பிரதேத்தில் காணப்படும் அதி முக்கிய பிரச்சினைகளையும், குறைபாடுகளை சுட்டிக் காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ளது
முதலாவது மகஜரில் சுட்டிக்காட்பட்டிருப்பது வீதி மின் விளக்கு புதிதாகவும் பழுதடைந்த விளக்குக்குகளை செய்து தரக்கோரி நினைவூட்டும் இரண்டாவது கடிதம் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது வீதி மின் விளக்கு ஒளிராமையினால் பொதுமக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இரண்டாவது மகஜரில் சம்குள பிரதான வீதியில் ஒரு வருட காலத்துக்கு மேல் உடைந்து கிடக்கு கல் வெட்டை புணர் நிர்மானம் செய்து தர கோரியும் இதனால் மக்கள் ,பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
முன்றாவது கடிதத்தில் மயில்த்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு உட்பட்ட வீதிகளுக்கும் ஒழுங்கைகளுக்கும் பெயர் பலகை இது வரை காலமும் அமைக்கப்படவில்லை அதனை சுட்டிக்காட்டி பெயர் பலகை நிருவப்படாமையினால் முகவரி தெரியாமல் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற அசெளகரியங்கள் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
நான்காவது கடிதத்தில் இது வரை காலமும் வீதிகள் புணரமைக்கப்படாமல் காணப்படுகின்றது அதனை புணர் நிர்மானம் செய்து அல்லது கிரவல் இட்டு செய்து தரக் கோரி இக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது
இம் மகஜர் ஒவ்வொன்றும் மிக முக்கியமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ளது
இதன் போது பிரதேச சபை செயலாளர் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக மயில்த்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்