உலகின் விலை மதிப்புமிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 7-ஆம் இடம் கிடைத்துள்ளது.
ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் உலகளவில் விளம்பர சந்தைகளில் விலை மதிப்புமிக்க முதல் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலிக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது. இதில் விராட் கோலியின் சந்தை மதிப்பு 14.5 மில்லியன் டாலர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸிக்கு 9-ம் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் விராட் கோலி லியோனல் மெஸ்ஸிசியை பின்னுக்கு தள்ளியத்துடன் இந்தப் பட்டியலில் இடப்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காராகியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் பத்து வீரர்களின் விவரம், ரோஜர் பெடரர் (சந்தை விலை மதிப்பு: 37.2 மில்லியன் டாலர்) லிப்ரான் ஜேம்ஸ் (சவிம: 33.4 மில்லியன் டாலர்), உசைன் போல்ட் (சவிம: 27 மில்லியன் டாலர்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (சவிம:21 மில்லியன் டாலர்), பில் மைகிசன் (சமவி: 19 மில்லியன் டாலர்), டைகர் வுட்ஸ் (சவிம: 16.6 மில்லியன் டாலர்), விராட் கோலி (சவிம: 14 மில்லியன் டாலர்), ரோரி மிக்ளிராய் (சவிம: 13 மில்லியன் டாலர்), லியோனல் மெஸ்ஸி (சவிம: 13.5 மில்லியன் டாலர்), ஸ்டெப் கரி (சவிம: 13.4 மில்லியன் டாலர்).