இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.
கடந்த 19ஆம் நாள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய போர்க்கப்பல் இன்று புறப்பட்டுச் செல்லும் நிலையில், பங்களாதேஷ் போர்க்கப்பல் ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் நாள் இரண்டு தென்கொரியப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வரவுள்ளன.
அதேவேளை, நொவம்பர் 2 ஆம் நாள் இரண்டு இந்தியப் போர்க்கப்பல்களும், நொவம்பர் 4 ஆம் நாள் இந்தோனேசியப் போர்க்கப்பல் ஒன்றும் சிறிலங்காவுக்கு வரவுள்ளன.
நொவம்பர் 7ஆம் நாள் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்றும், நொவம்பர் 10ஆம் நாள் சீனப் போர்க்கப்பல் ஒன்றும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.
குறுகிய கால இடைவெளிக்குள் அதிகளவு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.