சாமி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக த்ரிஷா அறிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் சாமி. 14 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. சாமி 2 படத்தில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என்று 2 ஹீரோயின்கள்.
சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் அதிகம். த்ரிஷாவின் கதாபாத்திரம் அவ்வளவு வெயிட்டானது இல்லை என்று செய்திகள் வெளியாகின.
சாமி 2 படத்தில் இருந்து விலகியுள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று த்ரிஷா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மாமி ஏன் இப்படி ஒரு முடிவு, நீங்கள் தான் பெஸ்ட் மாமி…நீங்கள் இல்லாமல் சாமி முழுமை பெறாது.