இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆட உள்ளது. இந்தத் தொடர் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று தேர்வு செய்துள்ளது.
முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யே ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, ரிடிமன் சாஹா, ரவிசந்தர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவ்னேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். சமீப காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத முரளி விஜய், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.