கான்பூரில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
சொந்தப் பணிகள் காரணமாக விராட் கோலி தன்னை 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்க அணித்தேர்வுக் குழுவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.
இதனால்தான் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கோலியின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இலங்கை தொடரின் போது அவருக்கு விடுப்பு அளிக்கவிருப்பதாக சூசகமாகத் தெரிவித்தார்.
இது குறித்து பிரசாத் கூறும்போது, “அவரது பணிச்சுமையைக் கண்காணித்து வருகிறோம். ஐபிஎல் போட்டிகளிலிருந்து தொடர்ச்சியாக விராட் கோலி விளையாடி வருகிறார். அதனால் அவருக்கு பிரேக் கொடுக்கலாம் என்று பரிசீலித்து வருகிறோம்” என்றார்.