திவுலபிட்டிய ஹென்பிடகெதர பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் பொலிஸ் அதிரடி படைப்பிரிவினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆயுதம் தாங்கிய குழுவினர் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையக் குறித்த பிரதேசத்தில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிரடிப்படையினர் மீது சந்தேக நபரொருவரினால் மேற்கொள்ளப்பட்டத் துப்பாக்கி பிரயோகத்தைத் தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் மீது பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த வேன் வண்டி பொலிஸ் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் போலித்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.