விசேட அதிரடிப்படையினருக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றுக்கும் இடையில் திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
குறித்த குழு தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, விஷேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், வீதியில் நின்று கொண்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் உயிரிழந்துள்ளாா்.
மேலும், குறித்த குழுவுடன் தொடர்புடைய வாகனத்தில் இருந்து கைக்குண்டுகள், துப்க்கிபாக்ககிகள்ள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.