தீய சக்திகளினால் எந்தவிதமான தடைகள் ஏற்பட்டுத்தப்பட்டாலும், புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வந்தே ஆகுவோம் எனவும், இதுவே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் உயர் கல்வி அமைச்சரும் பாராளுமன்றத்தில் சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வு எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியுள்ளார்.
மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகா சங்கத்தினர் நேற்றும் புதிய அரசியல் அமைப்பு வேண்டாம் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.