கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்கிற செய்தி வெளியான பிறகு அவரை சிலர் வரவேற்ற போதும், அவரது அண்ணனான சாருஹாசன், கமல்ஹாசனால் பத்து சதவிகிதம் ஓட்டுகூட வாங்க முடியாது. ரஜினியை வரவேற்கும் மக்கள் கமலை வரவேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இருப்பினும் கமலின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. எதிர்காலத்தில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தந்தையின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், எனது தந்தை அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் மனசாட்சியுள்ள நல்ல குடிமகன். நேர்மையானவர். அவருக்கு அரசியல் தெரியுமோ தெரியாதோ. ஆனால் இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பதை புரிந்து கொண்டவர். நான் அவருக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.