ரஷ்யாவில் நடைபெற்று வரும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பிரதிநிதிகளில் ஒருவர் விமானத்தில் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழு, ரஷ்யா நோக்கி சென்றனர்.
இலங்கை குழுவில் சுய வேலைவாய்ப்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹதகமகே விமானத்தில் சிகரெட் அருந்திய போது விமான அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
அதன் பின்னர் விமானம் டோஹா சர்வதேச விமானத்தில் தரையிறங்கிய சந்தர்ப்பத்தில் மஹிந்த கஹதகமகேவை 6 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் கட்டார் நிறுவனம் எந்தவொரு விமானத்திற்கு அவரை அனுமதிக்காததோடு மூன்றரை லட்சம் ரூபாய் தண்டபணம் மற்றும் தண்டனையுடன் அவரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மொஸ்கோ நோக்கி செல்லும் வேறு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் ரஷ்யா நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.