மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து, நீக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்கவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்காத எந்தவொரு கட்சி உறுப்பினரும், கட்சியின் பதவிகளை இழப்பார்கள் என்று துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக பணியாற்றாத கூட்டு எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில், நீக்கப்பட்டு. அவர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.