புதிய அரசியலமைப்பு உருவாக்கம் புதுப்பாதையில் பயணிக்க அத்திவாரமாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அரசாங்கத்தினுடைய முற்போக்கான செயற்திட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருவது அரசாங்கத் தலைவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரிந்த விடயம் என்று தெரிவித்துள்ளார்.
நடமாடும் சேவை ஊடகாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பல இடங்களிலேயே இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றது.
வவுனியா மாவட்டம் ஒரு முக்கியமான மாவட்டம். தமிழ் பேசும் வடக்கு மாகாணத்தில் வாசல் படியாக அமைந்திருக்கும் மாவட்டம்.
இந்த மாவட்டத்திலே தமிழ் மொழி பேசம் மக்களுடன் சிங்கள மொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். நாட்டில் இன ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கம் உருவாவதற்கு வடக்கு மாகாண மக்கள் ஆற்றிய பங்களிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்தது.
வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஏனைய மாகாணங்களை விட இந்த அரசாங்கம் உருவாக வடக்கு மாகாணம் அதிகம் காரணமாக இருந்திருந்தாலும் கூட வடக்கு மாகாணத்தின் பிரதானமான கட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக சேரவில்லை.
ஆனால் அரசாங்கத்தினுடைய அத்தகைய முற்போக்கான செயற்திட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் உதவியாக, உறுதுணையாக செயற்பட்டு வருவது அரசாங்கத் தலைவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்த அரசாங்கம் ஒரு பயணத்தை செய்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த வேலைத்திட்டத்தில் எங்களுடைய முழுமையான பங்களிப்பை நாங்கள் செய்து வருகிறோம்.
அது சரியான முறையில் நிறைவேறினால் தான் இத்தகைய வேலைத்திட்டங்களினுடைய முழுப் பெறுமதியையும் நாங்கள் அடையக் கூடியதாக இருக்கும்.
இந்த நடமாடும் சேவை மூலம் வழங்கப்படுகின்ற சேவைகள் இந்த மக்களிக்கு அத்தியாவசியமான சேவைகள்.
இந்த நாடு சுதந்திரம் பெற்றத்தில் இருந்து இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் சமபிரஜைகள் என்று வாழ்வதற்கான அத்திவாரமாக போடப்பட வேண்டிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தான் இறுதியாக இந்த நாடு சுபீட்சம் அடைவதற்கும், ஒரு புதுப்பாதையில் பயணிக்க ஆரம்பிப்பதற்கும் அத்திவாரமாக இருக்கும்.
ஆகவே அந்த வேலைத்திட்டத்தையும் தற்போது ஆரம்பித்திருக்கின்நற ஜனாதிபதி அவர்களுக்கும், பிரதமமந்திரி அவர்களுக்கும் வாழத்துக்களை கூறி அதை திறப்பட செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.